சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வும் மற்றும் காணி சம்பந்தமான விழிப்புணர்வூட்டல் நிகழ்வும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனிபா தலைமையில் மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நேற்று (27) நடைபெற்றது.
இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன்,
உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம்,அம்பாறை மாவட்ட தலைமை காணி உத்தியோகத்தர் கே.எல்.எம். முஸம்மில், காணி உத்தியோகத்தர் டி.கே.எம். ஜவாஹிர்,ஏனைய காணிப் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவக உத்தியோகத்தர்கள் , கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கிராம மட்ட குழுக்களின் தலைவர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours