கலாசார அலுவல்கள் அமைச்சு நடாத்திய அரச உத்தியோகத்தர்களுக்கிடையிலான தேசிய ரீதியிலமைந்த ஆக்கத்திறன் போட்டியின் குறும்படப்போட்டியில்
ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலம் சார்பில் பங்குபற்றிய ஆசிரியரும் கவிஞருமான ஜே.வஹாப்தீன் மூன்றாமிடத்தை பெற்று ஒலுவில் மண்ணுக்கும் தனது பாடசாலைக்கும் பெருமை சேர்த்தார்.
அத்துடன் கவிதை, மற்றும் சிறுகதைக்காக சிறப்புப் பரிசுகளையும் கொழும்பு BMICH இல் நடைபெற்ற விழாவொன்றில் வைத்து பெற்றுக்கொண்டார்.
இவர் ஊடகத்துறை, கலைத்துறை மட்டுமல்லாது பல்வேறு துறைகளிலும் பல சிறப்பு விருதுகளையும் பாராட்டினையும் பெற்றுக் கொண்டவர் என்பதும் சிறப்பம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours