கல்முனை ஆதார வைத்தியசாலை வரலாற்றில் எலும்பியல் சத்திரசிகிச்சையை ஆரம்பித்து வைத்த பெருமை எலும்பியல்சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியகலாநிதி கலாவேந்தன் அவர்களையே சாரும். அவரது சேவைக்காக வைத்தியசாலை சமுகம் இந்தபிரிவு வே ளையில் மனதார பாராட்டுகிறது.
இவ்வாறு கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.
உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் கல்முனை ஆதார வைத்தியசாலையின் எலும்பியல் சத்திர சிகிச்சை பதில் வைத்திய நிபுணர் டாக்டர் பி.கலாவேந்தன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு வைத்தியசாலையில் இடம்பெற்றது.
பிரியாவிடை நிகழ்வு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியக் கலாநிதி இரா.முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர்கள் மற்றும் சக ஊழியர்களாலும் அவரது சேவை பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
வைத்திய அத்தியட்சக இரா.முரளீஸ்வரன் அவர்களின் உரையில் 'எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் இவ் வைத்தியசாலையில் கடமையாற்றிச் செல்வது ஒரு வரலாற்று நிகழ்வாகவும் எலும்பியல் சத்திர சிகிச்சையை இங்கு வைத்தியசாலையில் ஆரம்பித்து வைத்த பெருமை கலாவேந்தன் அவர்களையே சாரும் என்று அவரது சேவையை பெருமைப்படுத்தினார். மேலும் ஏனையவர்களும் அவருடன் இணைந்து சேவையாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவரை கௌரவிக்கும் முகமாக பொன்னாடை மற்றும் நினைவுச் சின்னம் வைத்திய அத்தியட்சகரினால் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours