(விஜயரெத்தினம்)
இனி இலங்கையில் பால்சோறும் கட்டச்சம்பலுமே மிஞ்சும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவிப்பு.
இலங்கையில் உள்ள நாட்டுமக்களை கல்லெறிந்து கொலைசெய்யும் ஒன்றாகவே 367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளியிட்டுள்ள இறக்குமதி தடை உள்ளது.இனி இலங்கையில் பால்சோறும் கட்டச்சம்பலுமே மிச்சும் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி ஊடகசெயலாளரும், இலங்கை தமிழரசுகட்சி பட்டிருப்பு தொகுதி் தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
நாட்டில் 367,அத்தியவசியமற்ற பொருட்களுக்கு இறக்குமதி் தடைவிதிப்பு பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்.
புதிய அரசாங்கத்தின் நிதி அமைச்சர் அத்தியாவசியமற்ற பொருட்கள் என 367, பொருட்களை இனம்கண்டு அதனை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளார்.அவருக்கு அத்தியாவசியமாக இந்த பட்டியில் உள்ள பொருட்கள் காணப்பட்டாலும் இந்த பட்டியலில் உள்ள பல பொருட்கள் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாகவே உள்ளன.சோப்பு,வாகன டயர்கள் என்பனவும் அதனை பாவிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்களாகவே தென்படும்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்றே திண்டாடும் இந்த அரசாங்கம் பொருட்களின் விலைகளை கூட்டியும் 367, பொருட்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதும் கறுப்பு பணம் வைத்திருப்போருக்கும் இடைத்தரகர்களுக்கும், இரகசியமாக வெளிநாட்டு பொருட்களை கடத்துவோருக்கும் ஊக்குவிக்கும் ஒரு செயலாகவே இந்த தடையை பார்க்கவேண்டியுள்ளது.இதனால் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்ச மக்களின் தலையில் அரசாங்கம் மிளகாயை அரைத்து மக்களின் எண்ணங்களையும்,கண்ணையும் மூடியுள்ளது.இதனால் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்கள்.தங்களின் ஆட்சியை நல்லாட்சியாக நினைக்கும் கோதபாய தலைமையிலான அரசாங்கம் ரணில்-மைத்திரியால் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்திடம் பாடம் படிக்க வேண்டும்.எதிர்வரும் காலத்தில் தேர்தல் நடைபெற்றால் அரசாங்க உத்தியோகஸ்தர்கள் வாக்களிக்கும் தபால்வாக்கில் பாரிய சரிவுகளை சந்திக்கும் என மக்கள் தெட்டத்தெளிவாக கருத்து தெரிவிக்கின்றார்கள்.குடும்ப ஆட்சியை கவிழ்ப்பதில் மக்கள் தயாராகஇருக்கின்றார்கள்.
எரிபொருள் தட்டுப்பாடு, மின்சாரம் இல்லாமல் நாடு இருண்டநிலை, அத்தியாவசிய்பொருட்களின் விலை ஏற்றம், விவசாயிகளுக்கு யூறியா உரமில்லை, மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு,பேக்கரி உரிமையாளர்கள் பேக்கரியை மூடும்நிலை,பால்மா பொருட்களின் தட்டுப்பாடு,கர்ப்பிணித்தாய்மார்களுக்கு திரிபோஷா தட்டுப்பாட்டு,கட்டுப்பாடுவிலை இல்லாமல் அதிக விலைக்கு விற்கப்படுவதால் மக்களிடத்தில் வறுமை,பட்டிணி,பணப்பற்றாக்குறை என்று இலங்கை மிகமோசமான நிலைக்கு சோமாலியாவின் நிலையில் நாடு சென்று கொண்டிருக்கிறது.
நவீன உலகமயமாக்கல் காலத்தில் உலகத்தில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யமுடியாமல் திண்டாடும் நிலையை அவதானிக்கும்போது ஏற்கனவே இலங்கையை சிங்கப்பூராக மாற்றுவோம் என கூறி வாக்கு கேட்டவர்கள் இலங்கையை சோமாலியாவாக மாற்றப்போகிறார்கள், கிழக்கை மீட்போம் என கூறி வாக்கு கேட்டவர்கள் கிழக்கை தென்பகுதிக்கு விற்பனை செய்கிறார்கள்.இதுதான் இன்றய நிலை இன்னும் காலம் செல்ல செல்ல இலங்கையில் பால்சோறும் கட்டச்சம்பலுமே மிஞ்சும் எனவும் மேலும் கூறினார்.
பலவருடங்களாக மக்கள் பாவனையில் பாவித்து பழக்கப்பட்ட பல பொருட்களை அத்தியாவசியமாகவே மக்கள் கருதுகின்றனர்.பழவகைகள் சொக்கலட் வகைகளை சிறுவர்கள் உண்டு பழக்கப்பட்டவர்களும் உள்ளனர்.அதுபோல் பெண்களுக்கான வெளிநாட்டு முக அலங்கரிப்பு கிறிம் வகைகளை அவர்கள் பல வருடங்களாக பாவித்து வந்துள்ளனர் இவ்வாறானவைகளை திடீரென தடைசெய்யும்போது முகம் உடல் போன்றவைகளில் வேறுவிதமான தோல் நோய்கள் வரவாய்பு உள்ளது.
நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல்
பால், பாலாடை, வெண்ணெய், பேரீச்சம் பழம், அன்னாசிப்பழம், மாம்பழங்கள் அப்பிள், திராட்சை உள்ளிட்ட பழவகைகள், தானியங்கள், சொக்கலேட்டுகள், பழச்சாறுகள், நீர் போத்தல்கள், ஒரு சில பியர்கள், ஒரு சில வைன்கள், சிகரெட்டுகள், வாசனைத் திரவங்கள், சவரத்திற்கு முன்னரும் பின்னரும் பயன்படுத்தும் பொருட்கள், சோப்கள், மெழுகுவர்த்திகள், டயர்கள், அழிப்பான்கள், பயண பெட்டிகள், தோல் பொருட்கள், கார்பட்டுகள், ஆடைகளுக்கான டைகள் மற்றும் 'போ'க்கள், திரைச்சீலைகள், கட்டில் விரிப்புகள், விளையாட்டு காலணிகள், தொப்பி வகைகள், தலை பட்டிகள், குடைகள், கூந்தல், போலி சிகைகள்,
செரமிக் பாத்திரங்கள், கண்ணாடி பாத்திரங்கள், குக்கர்கள், அடுப்புகள், மேசைகள், சிங் மற்றும் கைகழுவும் பேசின்கள், கரண்டிகள், மணிகள், மின் விசிறிகள், வாயுச் சீராக்கிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள், வக்கும் க்ளீனர்கள், கிறைண்டர்கள், சவர சாதனங்கள், மின்சார மேசை விளக்குகள், நீர் சேமிப்பு சூடாக்கிகள், நிலையான தொலைபேசிகள், வானொலி ஒலிபரப்பு சாதனங்கள், கணனி திரைகள், மூக்குக் கண்ணாடி உள்ளிட்ட கண்ணாடி வகைகள்,
கைக்கடிகாரங்கள், சுவர் கடிகாரங்கள், இசைக் கருவிகள், வாகன இருக்கைகள், மின் விளக்கு தொகுதிகள், (முச்சக்கர வண்டி உள்ளிட்ட சக்கரங்கள் கொண்ட) விளையாட்டு வாகனங்கள, பொம்மைகள், வீடியோ கேம்கள், சீப்புகள் மற்றும் கூந்தலுக்கான கிளிப்புகள் உள்ளிட் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே இத்தகைய பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுவதாகவும், அதற்காக சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது எனத்தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours