(காரைதீவு  சகா)

ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் சபை, இலங்கை சைவநெறிக்கழகம், இலங்கை சைவநெறி தொண்டர் கழகம் இணைந்து இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு சைவ சமய தீட்சை வழங்கும் சிவபுண்ணிய நிகழ்வானது அம்பாறை சம்மாந்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி ஶ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.


 ஆறுமுகநாவலர் சபையின் பொதுச்செயலாளரும் இலங்கை சைவநெறிக்கழக த்தலைவருமான வைத்தியர் ஈசான தேசிகர் சிவ ஶ்ரீ தி.பிரதாபன் தலைமையில் இடம்பெற்றது.
 
இந்நிகழ்விற்கு
தீட்சை வழங்குவதற்காக ஶ்ரீ சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு கிரியா திலகம் சைவ வித்தகர் சிவஶ்ரீ சச்சிதானந்தசிவம் குருக்கள் திருமுன்னிலை அதிதியாக கலந்து கொண்டார்.

 இலங்கை சைவநெறிக்கழக பொதுச்செயலாளர் வெல்லாவெளி பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளருமான வி.துலாஞ்சனன், சைவநெறி தொண்டர் கழக தலைவர் சி.வினோதரூபன்,பிரதித்தலைவர் செல்வி உதயகெளரி மற்றும் சம்மாந்துறை பிரதேச ஒன்றிய ஆலயங்களின் செயலாளர் சு.காந்தன்,
பிரதேச ஆலயதர்மகர்த்தாக்கள்,அறநெறிப்பாடசாலை மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இந்து கலாசார மாவட்ட உத்தியோகத்தர் கு.ஜெயராஜி மேறகொண்டார்.

நிகழ்வில் அறநெறி மாணவர்கள் ஆலய நிருவாகிகள் அறங்காவலர் பலரும் கலந்து கொண்டு தீட்சை பெற்றனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours