(வி.ரி. சகாதேவராஜா)
நேற்று(9) புதன்கிழமை முதல்நாள் பூஜை நடைபெற்றது. ஆலய தர்மகர்த்தா பிரதம பொறியியலாளர் பரமலிங்கம் இராஜமோகனின் உபயத்தில் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தலைமையில் திருவிழா இடம்பெற்றது.
தொடர்ந்து ஒன்பது நாட்கள் திருவிழா நடைபெறுவதுடன் தினமும் காலை 10.00 மணிக்கு கும்ப பூஜையும் 12.00 மணிக்கு விசேட பூஜையும் மாலை 6.00 மணிக்கு இரவு பூஜையுடன் நற்சிந்தனையும் வசந்த மண்டபப்பூஜையினைத் தொடர்ந்து அம்பாள் உள்வீதி வெளி வீதி உலாவருதல் இடம்பெறும்.
13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து பாற்குட பவனியும் 16 ஆம் திகதி அம்பாள்இ விநாயகர்இ முருகப் பெருமான் சகிதம் முத்துச் சப்பரத்தில் தேரோடும் வீதி வழியாக பவனி வருதலும் இடம் பெற்று 18 ஆம் திகதி காலை நடைபெறும் சமுத்திரத் தீர்த்தோற்சவத்துடனும் 19ஆம் திகதி மாலை நடைபெறும் பைரவர் பூஜையுடன் உற்சவம் இனிதே நிறைவுபெறவுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours