(சா.நடனசபேசன்)

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட மத்தியமுகாம் ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தின் ஆசிரியராக கடமையாற்றும் இ.தவேந்திரன் அவர்களால் எழுதப்பட்ட ஆங்கிலப்புத்தகத்தின்; முதல் பிரதி சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு வலயக்கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

தரம் 01 தரம் 2  மாணவர்களுக்கான ஆங்கிலப் பயிற்சிப்புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தது அதனுடைய பிரதியே வலயக்கல்விப் பணிப்பாளருக்கு கையளிக்கப்பட்டது.

துறைநீலாவணைக் கிராமத்தினைச் சேர்ந்த இவர் சிறந்த ஆங்கிலப் புலமை உடையவராக இருப்பதுடன் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் சிறப்புப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டதுடன் பட்டப்பின் டிப்ளோமா மற்றும் ஆங்கில டிப்ளோமா ஆகியவற்றினை பூர்த்திசெய்து இருப்பதுடன் அவரிடம் ஆங்கிலத்தில்  இருந்த தேர்ச்சி காரணமாக ஆரம்பக்கல்வி மற்றும் இடைநிலை மாணவர்களுக்கான பயிற்சிப்புத்தகங்களை தயார் செய்து மாணவர்களுக்காக வழங்கிவரும் நிலையில் விஷேட தேர்ச்சிகள் அடங்கிய முதன்மை நிலை 1 இற்கான இப்புத்தகத்தினை வெளியீடு செய்துள்ளார்.

 இப் புத்தகத்திற்கான ஆசிச் செய்தியினை  சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ் நஜீம் அவர்கள் வழங்கி இருப்பதுடன் இவ் ஆசிரியருக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours