( அஸ்ஹர் இப்றாஹிம் )

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் விரளயாட்டுக் கழகத்தின் 40 வருட புர்த்தியனை முன்னிட்டு நடாத்தப்படும்  ” Flying horzian’s super smash “  பௌசி ஞாபகார்த்த கிண்ண 20 இற்கு 20 கடினபந்து கிறிக்கட் சுற்றுக் போட்டியின் 11 வது போட்டி  வெள்ளிக்கழமை ( 25 ) மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது.

கழகத்தின் தலைவர் ஓய்வு பெற்ற அதிபர் ஐ.எல்.ஏ.மஜீட் தலைமையில் இடம்பெற்ற  மேற்படி  நிகழ்வில் சாய்ந்தமருது அமானா நற்பணி மன்ற தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எல்.பரீட் பிரதம அதிதியாகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் எம்.எஸ்.உமர் பாறுக் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
 நடைபெற்ற  போட்டியில் சாய்ந்தாமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி களம் இறங்கியது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்  ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணி 20 ஓவர்களில் 3  விக்கட்டுக்களை இழந்து 195   ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  சாய்ந்தாமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டு கழகம் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களையும்  இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று தோல்வியினை தழுவிக் கொண்டது.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக  சாய்ந்தமருது ஹொலி ஹீரோஸ் யுத் அணியைச்  சேர்ந்த ஆர் றப்ஸான்   தெரிவு செய்யப்பட்டார்.
இப்போட்டிக்கு நடுவர்களாக ஏ.எம்.பயாஸ் , ஏ.எம்.டில்ஸான் ஆகியோர் கடமையாற்றினார்கள்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours