பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)



மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு அம்பாறை மற்றும் மட்டக்களப்பு பகுதியில் உள்ள   வரலாற்றுப் பிரசித்தி பெற்ற  ஆலயங்களில்  இம்முறை சிறப்பாக அனுஸ்ட்டி முன்ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக அவ்வாலயங்களின்  தலைவர் மற்றும் நிர்வாகிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு  பல்வேறு சமய கலாசார கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர்.அத்துடன் விசேடமாக போக்குவரத்து வசதிகளும் இரவில் விடியவிடிய விழித்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

அத்துடன் இன்று காலை பஸ் வண்டிகளில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மக்கள் வட பகுதியில் உள்ள சிவன் கோவில்களை  நோக்கி செல்வதையும் நேரில் காண முடிந்தது


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours