அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.

பொது அமைதியின்மையை அமைதிப்படுத்தவும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், மக்கள் தங்கள் விருப்பப்படி ஒரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கவும் உதவும் சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று இந்த யோசனையில்; சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 10 சுயேச்சைக் கட்சிகள் சார்பில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாப்பா மற்றும் விஜயதாச ராஜபக்ஸ ஆகியோர் இந்த யோசனை அடங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ளனர். •

1-நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய நிறைவேற்று சபையை நிறுவுதல் •

2-இடைக்கால அரசாங்கத்தை நடத்துவதற்கு குறைந்த எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமித்து தேசிய நிர்வாக சபையால் அவர்களின் கடமைகள் தீர்மானிக்கப்படும்.

3-தேசிய நிறைவேற்று சபையின் பரிந்துரையின்; பேரில் ஜனாதிபதியினால் புதிய பிரதமரை நியமிக்கப்படுவார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours