பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர சபையின் 2022ஆம் ஆண்டுக்கான 49 ஆவது சபை அமர்வு மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை(26) மாலை இடம்பெற்ற இச்சபை அமர்வின் போது முதலில் சமய ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து கடந்த 2022.03.23 அன்றைய திகதி கூட்டறிக்கையை உறுதிப்படுத்தல், முதல்வரின் உரை, நிலையியற் குழுக்கூட்டத் தீர்மானங்களை சமர்ப்பித்தல், என்பன நடைபெற்றன.
அத்துடன் உறுப்பினர்களான மீராசாகிப் அப்துல் றபீக் மற்றும் அப்துல் ரஹ்மான் அமீர் ஆகியோரினால் பிரேரணைகள் முன்மொழியப்பட்ட பின்னர் முதல்வரின் ஏனைய அறிவுறுத்தலுடன் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours