பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைச்சுக்கள், திணைக்களங்கள், தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிருவாகம்) ஏ.மன்சூர் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண அமைச்சுக்கள், மாகாண திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்காக 140 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், தேசிய பாடசாலைகளுக்கு 34 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும், மாகாண பாடசாலைகளுக்கு 61 அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் மாகாண பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டவர்களில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 31 பேரும், அம்பாறை மாவட்டத்திற்கு 30 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours