(காரைதீவு சகா)

வரலாற்றுப்பிரசித்திபெற்ற மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய மண்டலாபிசேக இரவு நேரப்பூஜைகள் சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.
அவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் கடந்த 6ஆம் திகதி சிறப்பாக நடைபெற்றுமுடிந்து மண்டலாபிசேகப்பூஜைகள் நடைபெற்றுவரும்  இந்நாட்களில் பக்தர்கள் அதிகளவில் அங்கு செல்லஆரம்பித்துள்ளனர்.

நேற்று 18வது  தின பூஜை.ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு வருகைதந்திருந்தார்கள்.
மண்டலாபிசேகபூஜைகள் யாவும் எதிர்வரும் மே மாதம் 5ஆம் திகதி நிறைவுற்று 6ஆம் திகதி சங்காபிஷேகத்துடன்  கும்பாபிஷேக விழா நிறைவடையவிருக்கிறது  என ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.

அங்கு சித்ராபௌர்ணமியில் சித்திரகுப்தநாயனார் சரிதம் படித்தல் இடம்பெற்று தற்போது தினமும் பன்னிருதிருமுறை முற்றோதுதல்  நடைபெற்றுவருகின்றது. ஓய்வுநிலை அதிபர் சா.கந்தசாமி தலைமையிலான குழுவினர் இதில் ஈடுபட்டுவருகின்றனர்.
பக்தர்கள் அனைவரும் அன்னதானத்திலும் பூஜையிலும்  பங்கேற்று மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.இரவு 9 மணிவரை பூஜை இடம்பெற்றுவருகிறது.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours