(சுமன்)


மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் புதிய இயக்குனர் சபைத் தெரிவுக்கான விசேட பொதுச்சபைக் கூட்டம் இன்றைய தினம் இயக்குனர் சபைத் தலைவர் எம்.உதயராஜ் தலைமையில் கூட்டுறவு மண்டபத்தில இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள், பொதுச்சபை உறுப்பினர்கள், கூட்டுறவுத் திணைக்கள உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு நிருவாக நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் புதிய இயக்குனர் சபை உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றது. மிகவும் அமைதியான முறையில் எவ்வித போட்டிகளுமின்றி இயக்குனர் சபைக்கு மு.துதீஸ்வரன், தே.காந்தன், மங்கையற்கரசி ரவிநாதன், இராஜரஞ்சினி இராஜேந்திரம், இரா.கோபிராஜ், க.ஜினோஜா, இரா.இராயப்பு, க.சோமசுந்தரம், சி.குமணன் ஆகிய ஒன்பது உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் சபையின் தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவிற்காக புதிய இயக்குனர்சபை உறுப்பினர்களின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குனர் சபைத் தலைவராக மு.துதீஸ்வரன் மற்றும் உபதலைவராக தே.காந்தன் ஆகியோர் இயக்குனர் சபை உறுப்பினர்களால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு பல்நோக்குக் கூட்டறவுச் சங்கத்தின் 51 ஆண்டுகால வரலாற்றில் போட்டியின்றி ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்ட இயக்குனர் சபையும், தலைமையும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours