இ.சுதா



துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும் ஊடகவியலாளருமான  பாக்கியராசா மோகனதாஸ்  கடந்த இரவு இறைபதம் எய்தினார்.இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் வீரகேசரியின் களுவாஞ்சிகுடி நிருபராகவும்,தினகரன் பத்திரிகையின் மண்டூர் குறுப், தமிழன் பத்திரிகையின் வீரமுனை நிருபராக தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்த இவர் இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில் பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள்,கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்த பல்துறைக் கலைஞரான இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.அன்னாரின் இறுதிக்கிரியை ஞாயிற்றுக்கிழமை 3 மணிக்கு துறைநீலாவணை பொது மயானத்தில் நடைபெறும்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours