வெல்லாவெளி பொலிஸ்பிவிற்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று (01) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 18 வயதுடைய மாணவியான தீபன் ஹம்ஷாயினி இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

குறித்த மாணவி தனது குடும்பத்தினருடன் உறவினர் ஒருவரின் வீடு சென்று திரும்பிய நிலையில் பரீட்சை அண்மித்துள்ள நிலையில் படிக்கும் படி தாயார் கூறியதாகவும் பின்னர் தனது கற்கை அறைக்குள் சென்ற மாணவி நேரமாகியும் வெளியில் வராத நிலையில் அவரின் சகோதரன் சென்று சகோதரியை அழைத்த போது வீட்டின் கதவு அடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்னர் கதவினை திறந்து உட்சென்றபோது குறித்த யுவதி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாவும் பின்னர் தூக்கில் இருந்து மீட்டெடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைத்துள்ளதனை வைத்தியர் உறுதிப்படுத்தியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின ;போது தெரியவந்துள்ளது.

களுவாஞ்சிகுடி சுற்றுலா பதில் நீதிமன்ற்  நீதிவான் ஏ.எல்.முணாஸ் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை-தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மற்றும் சட்டவைத்திய அதிகாரி அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours