அம்பாறை மாவட்டதில் எரிபொருள் வழங்கும் சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருந்துள்ளனர். 

இதனைதொடர்ந்து ஆலையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று நண்பகல் முதல் பெட்றோலை பெற்றுக்கொள்வதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வாகன உரிமையாளர்கள் இரு வரிசைகளில் காத்திருந்ததுடன் நண்பகல் முதல் பெட்றோலை வழங்கும் செயற்பாடுகள் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் ஏனைய எரிபொருள் நிரப்பு நிலையங்களை விட இங்கு கடமையாற்றும் ஊழியர்கள் தமது சேவையினை துரிதமாக முன்னெடுப்பதுடன் காலமறிந்து அதிகளவான ஊழியர்களை கடமையில் இருந்து எரிபொருள் வழங்கும் செயற்பாட்டை விரைவு படுத்துவதனால் அதிகமான பொதுமக்கள் விரைவாக எரிபொருளை இங்கு பெற்றுச் சென்றுள்ளனர்.

எனினும் மின்சாரம் தடைப்பட்டதன் விளைவாக எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் சற்று தாமதமானாலும் பின்னர் மின்பிறப்பாக்கி மூலமாகவும் எரிபொருள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours