இயற்கை  முறை விவசாயத்திற்கான  சேதனை  பசளை உற்பத்தி, இயற்கை பீடைநாசினிகள்  தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான செயல்முறை  பயிற்சி  மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான்  விவசாய போதனாசிரியர் பிரிவில் இன்று (06) திகதி புதன்கிழமை நடைபெற்றது . 


மட்டக்களப்பு மாவட்டத்தில் இயற்கை பசளையினை  நடைமுறைப்படுத்தும் வகையில்  விவசாய விரிவாக்கல் பிரிவினால் சேதனை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்  சேதனை பசளை உற்பத்தி, இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான பயிற்சி செயலமர்வுகள் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
அதனடிப்படையில்  மட்டக்களப்பு   சத்துருக்கொண்டான் விவசாய போதனாசிரியர் பிரிவில்   போதனாசிரியர் தெய்வமனோகரி ரமேசன் தலைமையில் இயற்கை முறையிலான விவசாய  சேதனை  பசளை உற்பத்தி  மற்றும்  இயற்கை பீடைநாசினிகள் தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான செய்முறை  பயிற்சி இன்று முன்னெடுக்கப்பட்டது.
 
சத்துருக்கொண்டான் கும்பிளாமடு பகுதியில் உள்ள விவசாயின் தோட்டத்தில்  முன்னெடுக்கப்பட்ட   சேதனை  பசளை உற்பத்தி  மற்றும்  இயற்கை பீடைநாசினிகள்   தயாரிப்பு மற்றும் பாவனை  தொடர்பான நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, வலயம் மத்தி உதவி விவசாய பணிப்பாளர் என். கணேசமூர்த்தி, சமுர்த்தி  அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறிதரன், பாடவிதான உத்தியோகத்தர்கள், பல்கலைக்கழக மாணவ  பயிலுனர்கள்,  சத்துருக்கொண்டான் கும்பிளாமடு விவசாய போதனாசிரியர்  பிரிவில் தெரிவு செய்யப்பட  பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கூட்டெரு தயாரித்தல், இயற்கை முறை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, திரைப்பசளை  தயாரித்தல், பழமரங்களை  கத்தரித்து சேதனப்பசளை இடல், கருகிய உமிபாவனை, கிளசரியா நடுகை முறை போன்ற செய்முறை விளக்க பயிற்சிகள் இதன்போது போதனாசிரியர்களினால் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours