மட்டக்களப்பு - வந்தாறுமுலை பகுதியில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை கைது செய்துள்ளதுடன், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று(21) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமுலை பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த வீட்டை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தலைமையிலான பொலிஸார் முற்றுகையிட்டனர்.
இதன்போது கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவரை நேற்று (21) நள்ளிரவு கைது செய்ததுடன் 10 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு 42 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி. பண்டார தெரிவித்துள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours