(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசாரப்பிரிவு மற்றும் கலாசார அதிகாரசபை இணைந்து நடாத்திய "தொலஸ்மகே பஹன" - 2022 வேலைத்திட்டத்தின் "ஓவியப் பயிற்சிப்பட்டறை"
சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் (05) இடம்பெற்றது.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலில், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.சபீகாவின் ஒருங்கிணைப்பில், பிரதேச செயலாளர் ஏ.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரீ.எம். றின்ஸான், கலாசார உத்தியோகத்தர் சுரேஷ் குமார் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்ததோடு, ஏ.எல்.எம். ஹாதி நிகழ்வில் வளவாளராகக் கலந்து கொண்டார்.
இம்முறை சாதாரண தரப் பரீட்சை எழுத இருக்கின்ற மாணவர்களில் சித்திரப் பாடத்தை தெரிவு செய்திருக்கின்ற மாணவர்கள் திறமைச் சித்தியைப் பெறுவதற்காகவும் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் ஏற்பாடு செய்து நடாத்தப்படும் சித்திரப் போட்டியில் கலந்து மாணவர்கள் பரிசு பெறவேண்டும் என்ற நன்நோக்கங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பயிற்சிப்பட்டறையில் ஆர்வத்துடன் மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours