ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமட் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சற்று முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்
அத்துடன் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச் எம் எம். ஹரீஸ் , எம் சி பைஸால் காசிம் , தௌபீக் ஆகியோர் கட்சி உறுப்புரிமையில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று தாருஸலாமில் கூடிய உயர்பீட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் அரசின் சில சட்டமூலங்கள், வரவுசெலவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த அவர்கள் அண்மையில் அரசுக்கான தமது ஆதரவை விலக்கி கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours