(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு


இன்றைய சிறுவர்களே நாளைய எதிர்காலம்

Adolescent Health -
Dr . Dan Soundararajah MO, Regional Mental Health ,
Dr. Gadambanathan Thanabalasingam Consultant Psychiatrist
மாணவர்களிடையே சிறந்த தலைமைத்துவ பண்புகளையும் நேர்மறையான எண்ணங்களை வளர்ப்பதனையும் நோக்கமாக்க் கொண்டு இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து வலயக்கல்வி பணிமனையின் கீழான Counsellor Teachers ஐயும் ISA என 100 கல்வியலாளர்களை அழைத்து எமது மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் முழுநாள் பயிற்சி ஒன்றை வெற்றிகரமாக முடித்திருந்தோம்.
எமது மாவட்டத்தில் தற்கொலை, கொலை, கொள்ளை , கற்பழிப்பு, போதைப்பொருள் பாவனை ஒருபுறமிருக்க பாடசாலை இடைவிலகல் , தீய பழக்கவழக்கங்கள், வன்முறை , மானிடப்பிறழ்வுகள் தொடர்ச்சியாக அதிகரித்து செல்கின்ற நிலையில் சமூகப்பொறுப்புடன் இந்த சிரமமிக்க செயற்பாட்டை எனது தலையில் சுமக்க கிழக்கு மாகாண ஆளுனர் Governor Eastern Province , கிழக்கு மாகாண PDHS Dr. Mohamed Thowfeek ஆலோசனையுடன் சந்தர்ப்பத்தை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் Kanapathipillai Karunaharan Education Department Child Protection Child Probation அனைவருக்கும் சுகாதார துறைசார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த ஒரு மாதமாக ஆரம்பித்த இந்த பயணம் அனைவரினதும் பங்களிப்புடன் நிட்சயமாக இந்த மாவட்டத்தில் ஒரு பாரிய செயற்பாட்டு மாற்றத்தை ஏற்படுத்தி எமது சிறுவர்களின் எதிர்காலத்தை சீர்திருத்தும் என்ற நம்பிக்கையுடன் எமது ஐந்தாண்டு திட்டத்தை உறுதியாக ஆரம்பித்துள்ளோம்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours