(எஸ்.அஷ்ரப்கான் - 0760123242)

ஒலுவில் அல்-ஹம்றா சூப்பர் கிங் ஆசிரியர்கள் அணிக்கும் ஹம்றா பிர்லியன் போய்ஸ் மாணவர்கள் அணிக்கும் இடையிலான சினேக பூர்வ மென்பந்து கிரிக்கெட் போட்டி பாடசாலை மைதானத்தில் வெள்ளிக்கிழமை (01) இடம்பெற்றது.

இப்போட்டியில் அல்-ஹம்றா மகா வித்தியாலய ஹம்றா சுப்பர் கிங் ஆசிரியர்கள் அணி  மூன்று ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஹம்றா சுப்பர் கிங் ஆசிரியர்கள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட் இழப்பிற்கு 110 ஓட்டங்களை பெற்றனர்.

111 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹம்றா பிர்லியன் போய்ஸ்  மாணவர்கள் அணி 8 ஓவர்கள் முடிவில் 108 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டனர்.
இதனடிப்படையில் 3 ஓட்டங்களால் ஹம்றா சுப்பர் கிங் ஆசிரியர்கள் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஹம்றா சுப்பர் கிங் ஆசிரியர்கள் அணியின் ஆசிரியர் முஹம்மட் றிஸாட் (55 ஓட்டங்கள்) தெரிவானார்.

மிகவும் சுவாரஷ்யமாக அமைந்த இந்தப் போட்டி, இறுதிக்கட்டம் வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஹம்றா பிர்லியன்போய்ஸ்  மாணவர்கள் அணி இறுதி ஓவரில் ஒரு பந்துக்கு 04 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி தோல்வியை தழுவிக் கொண்டனர்.

இங்கு அதிதியாக கலந்துகொண்ட பாடசாலையின் உதவி அதிபர் எம்.எச்.மஹ்மூத் நஸீம் வெற்றி பெற்ற ஹம்றா சுப்பர் கிங் ஆசிரியர்கள் அணித்தலைவர் ஆசிரியர் ஆர்.நெளஸாட் உள்ளிட்ட வெற்றி அணியிடம்  கேடயத்தினை வழங்கி கௌரவித்தார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours