(காரைதீவு  நிருபர் சகா)

 
கனடா நாட்டில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த நிலாபாரதி அவர்களின் பத்தாவது வருட பிறந்தநாளை ஒட்டி காரைதீவிலுள்ள விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
 இன்றைய தினம் இடம்பெற்ற இந்த நிகழ்வில் உதவியை பெற்றெடுத்த காரைதீவு பிரதேச சபை தவிசாளரும் நாடறிந்த சமூக சேவையாளருமான  கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் அதனை வழங்கி வைத்தார்.

 பாடசாலை அதிபர் திருமதி தேவகௌசல்யா குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் வழங்கி வைக்கப்பட்டுள்ளதோடு வசதி குறைந்த மாணவர்கள் அனைவருக்கும்  கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன .
மேலும் அதிபர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பாடசாலைக்கு மற்றும் ஒருஉதவி விரைவில் வழங்கி வைக்கப்பட இருக்கின்றது ..

இந்த அமர்வில் நிலாபாரதி அவர்களின் பிறந்த நாளுக்காக கேக் வெட்டி அவருக்கு வாழ்த்துக்களும் அங்கே பரிமாறப்பட்டன.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours