நாட்டை ஆளுகின்ற தலைவர்களது சிறந்த திட்டமிடல் இல்லாத காரணத்தினால் மக்கள் பட்டினிசாவை எதிர்கொள்ளும் நிலை உருவாகிக்கொண்டு இருப்பதுடன் நாடும் அழிவுப்பாதைக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
சம்மாந்துறை கல்விவலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட சர்ஸ்வதி சிலை திறந்துவைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 01 ஆம்திகதி பாடசாலையின் அதிபர் என். பிரபாகர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த சரஸ்வதி சிலையினை நிர்மானிப்பதற்கு அப்பிரதேசத்தினைச் சேர்ந்த சமூகசேவகர் சமாதான நீதவான் இராஜகோபால் அவர்களது புதல்வர் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் அருண் அவர்களது சொந்த நிதியில் 8 அடி உயரமுடைஇச்சிலை அமைக்கப்பட்டது
இவ் திறப்புவிழாவில்; அருண்அவர்களது பெற்றோர்களான இரஜகோபால் திருமதி அருந்ததி இராஜகோபால் கலைமகள் வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எஸ்.பாலசிங்கன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இவர்களது சேவையினைப் பாராட்டி நிகழ்வில் கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது அவர் மேலும் பேசுகையில்
இலங்கை சுதந்திரம் அடைந்த 1948 இற்குப் பின்னர் ஆசியாவில் இலங்கை பொருளாதார ரீதியில் மூன்றாம் இடத்தில் இருந்தது முதலாம் இடத்தில் யப்பான் இரண்டாமிடத்தில் மலேசியா மூன்றாம் இடத்தில் இலங்கை ஆனால் இன்று உலக நாடுகளோடு ஒப்பிடும்போது வறுமையான நாடாகவும் உலக நாடுகளிடம் கையேந்தும் நிலையும் உருவாகி இருக்கின்றது இதற்கெல்லாம் யார்காரணம் என்று பார்த்தால் இந்தை நாட்டை ஆளும் தலைவர்களது பிழையான திட்டமிடல்களாக இருக்கின்றது
இந்த நாட்டில் வாழுகின்ற தமிழ்மக்கள் இந்த நாட்டின் பிரதிநிதிகளா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு தமிழர்களை நடாத்துகின்றனர் இனவாதம் மதவாதம் என்பன தலைவிரித்தாடும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது இந்நிலைகளால்தான் நாடு மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இங்கு வாழும் ஒவ்வொருவரும் பொருளாதாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நாவிதன்வெளிப்பிரதேசம் கடந்தகால போர்ச்சூழலினால் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டது அதனைத்தொடர்ந்து இத்தப்பகுதியில் கலைத்துறையில் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்று இருந்தனர் ஆனால் விஞ்ஞானத்துறை பொறியல் துறை சட்டத்துறை மிகமிகக்குறைவாக இருந்தது தற்போது இப்பகுதியில் அனைத்துத்துறைகளிலும் மாணவர்கள் தடம் பதித்து வருவது எமக்குக்கிடைத்த பெரும் வெற்றியாகும்
இப்பாடசாலையினைப்பொறுத்தமட்டில் கல்வியில் பலசாதனை படைத்துவருவது இப்பிரதேசத்துக்குப் பெருமையான விடயமாகும் இப்பாடசாலையின் முன்னனால் அதிபர் சீ.பாலசிங்கன் தற்போதைய அதிபர் என்.பிரபாகர் உட்ப ஆசிரியர்கள் பாடசாலையின் கல்விக்காக பல முயற்சிகளைச் செய்து சாதனைபடைக்க வைத்துள்ளமைக்காக பாராட்டுகின்றேன் அதே வேளை இச் சரஸ்வதி உருவச்சிலையினை நிர்மாணிக்க உதவிய இராஜகோபால் குடும்பத்திற்கும் பாராட்டுகின்றேன் என்றார்
Post A Comment:
0 comments so far,add yours