பைஷல் இஸ்மாயில் - 


நாட்டைக் கொண்டு செல்ல முடியாதவர்கள் உடனடியாக பதவி விலகி நாட்டை நடாத்தக் கூடியவர்களிடம் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் செல்லவேண்டும். இல்லை என்றால் நாட்டு மக்கள் சரியான தீர்ப்பினை மிக விரைவில் வழங்குவிர்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

ராஜபக்ஷ அரசுக்கு எதிராக கனடாவில் இன்று (10) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உலக நாட்டிலுள்ள தலைவர்கள் எதிர்நோக்காத எந்தவொரு பாரிய எதிர்புக்களையும், அவமானங்களையும் எமது நாட்டின் ஜனாதிபதி எதிர்நோக்கி வருகின்றார். அவருக்கு எதிரான போராட்டங்கள் இலங்கையில் மட்டுமல்லாமல் உலக நாட்டிலுள்ள சகல இலங்கையர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாமும், எமது நாடும் கடன் சுமையால் ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிறிக்கின்றது. ஆனால் ராஜபக்ஷ குடும்பத்தினர் இதை கவனிக்காது கடனுக்குமேல் கடன்பட்டு நாட்டை கொல்லையடித்துச் செல்பவர்களாகவும், கடன் சுமையை இன்னும் பல மடங்குகளாக அதிகரிக்கச் செய்துவிட்டார்கள். அதுமாத்திரமின்றி நாட்டையும் மக்களையும் வேறு நாட்டுக்கு விற்றுவிட்டு தப்பிச் செல்லும் நிலைமையில் இருந்த வருகினேறார்கள். 

ராஜபக்ஷக்களின் செயற்பாட்டை அறிந்த மக்களும், சில அரசியல்வாதிகளும் அதற்கொதிராக குரல் கொடுத்தனர். 
அவ்வாறவர்களை ராஜபக்ஷ குடும்பத்தினர் ஏதோ ஒரு வழியில் வாய் பேசாதவாறு செய்துவிடுகின்றர். இந்நிலைமையில் அமைச்சர்களின் அமைச்சுப் பதவிகள் பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர், பல பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாட்டை முடக்கும் யுக்திகளைக் கையாண்டு அவர்களின் செயற்பாடுகளையும் முடக்கினர். இவை அனைத்துக்கும் எதிராக பொதுமக்கள் பொங்கி எழுந்து இனமத வேறுபாடுகளுக்கப்பால் இணைந்துகொண்டு வீதிக்கு இறங்கினர். 

இந்தப் போராட்டம் இன்று தீயாய் மாறி உலக நாடுகளினதும், மக்களினதும் எதிர்ப்புக்களுக்கு ராஜபக்கஷ அரசு மாறியுள்ளது. எமது நாடு ராஜபக்ஷ குடும்பத்தினர் கையில் இன்னும் இருக்குமாக இருந்தால் எமது நாடு பாரிய அழிவுப்பாதைக்குச் சென்றுவிடும். அதற்கு முதல் ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டை நடாத்தக்கூடியவர்களின் கையில் கொடுத்துவிட்டுச் செல்லவேண்டும். இல்லை என்றால் அவர்களுக்கு எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை நான் சொல்லவேண்டியதில்லை. நாட்டு மக்களே சரியான தீர்ப்புக்களை மிக விரைவில் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours