( காரைதீவு சகா)
இந்துக்களின் புனித தினமான சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (16) சனிக்கிழமை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் விஷேட பூசை மற்றும் அன்னதானம் இடம் பெற்றது.
சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சித்திர குப்தர் நாயனார் சரிதம் பாடப்பட்டது.
காரைதீவை சேர்ந்த ஓய்வுபெற்ற அதிபர் சா.கந்தசாமி ஆலையடிவேம்பைச் சேர்ந்த எஸ்.கிருபைராஜா தலைமையிலான குழுவினர் சரிதம் படித்தனர்.
12 மணிக்கு சித்ரா பௌர்ணமி விஷேட பூசை ஆலய குரு சிவசிறி ஹோவர்த்தன சர்மா தலைமையில் நடைபெற்றது.
வரலாற்றில் என்றுமில்லாத வகையில்
ஆயிரக்கணக்கான பக்தர்கள் இவ் விசேட பூசையில் கலந்து கொண்டனர்.
ஆலய அறங்காவலர் சபை ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா சித்ரா பௌர்ணமி யின் சிறப்பு பற்றி உரையாற்றினார்.
தொடர்ந்து அம்மன் அன்னதான மண்டபத்தில் ஆலய தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் அன்னதான வைபவம் நடைபெற்றது.
Post A Comment:
0 comments so far,add yours