(மண்டூர் ஷமி)

ஏறாவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் மயிலம்பாவெளியில் இடம் பெற்ற விபத்தில் நேற்று (14) உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தன்னாமுனை பிரதேசத்தைச்சேர்நத ஒரு பிள்ளையின் தந்தையான 40 வயதுடைய முத்துலிங்கம் சிவாகரன் என்பவரே விபத்தில் உயிரிழந்தவராவார்.

குறித்த குடும்பஸ்தர் மயிலம்பாவெளி காமாட்சியம்மன் வீதியூடாக தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருக்கும் போது மோட்டார்; சைக்கில் வேகக்கட்டுப்பட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள முட்கம்பி வேலியில் மோதியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக  சம்பவ இடத்திற்குச் சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீர்  சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை ஏறாவூர்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours