வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

சம்பவ தினத்தன்று எரிபொருளை பெறுவதற்காக இரு நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் இருவருக்கிடையில் தங்களின் மோட்டார் வாகனங்களை நிரல்படுத்துவதில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியபோது மண்டூர் பிரதேசத்தை சேர்நதவர் ஒருவர் பலமாக தாக்கப்பட்டதையடுத்து சம்பவம் பற்றி வெல்லாவெளி பொலிஸாருக்கு சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளரும் திடீர் மரண விசாரணை அதிகாரியுமான த.தவக்குமார் ஒருவரினர்ல தெரியப்படுத்ததையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் பொலிஸாரின் விசாரணைகளின் பின்னர் குறித்த நபரை இன்று களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதிவான் ஜே.வி.ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் ஆஜர் படுத்திய பொலிஸார் அவர் மீதான குற்ரங்களை நீதிவான் முன்நிலையில் முன்வைத்த போதிலும் குறித்த ஊடகவியலாளாரினால் சம்ப இடத்தில் நின்று சம்பவம் பற்றி பதிவு செய்ப்பட்ட காணெளி பொலிஸாரினால் பெறப்பட்டு நீதிவான் முன்நிலையில் முன்வைக்கப்பட்ட போது குறித்த நிபரினை எதிவரும் ஆகஸ்ட் மாதம் (1) முதலாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.குறித்த நபரினை தாக்கிய ஏனைவர்களையும் கைது செய்ய பொலிஸர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours