இந்தியாவின் 15 ஆவது ஜனாதிபதியாக பாஜக கூட்டணி வேட்பாளர்  திரௌபதி முர்மு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேர்தல் முடிவுகளின் அடிப்படையில், இவர் இரண்டாவது பெண் ஜனாதிபதியாகவும், முதல் பழங்குடி இன பெண் ஜனாதிபதி என்ற கௌரவத்தையும் பெற்றுள்ளார்.

கடந்த ஜூலை 18 ஆம் திகதி இடம்பெற்ற குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியான நிலையில், திரெளபதி முர்மு 5,77,777 வாக்குகளையும்,யஷ்வந்த் சின்ஹா 2,61,062 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

இதன்மூலம் அதிக்கூடிய வாக்குகளை பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றுள்ளதுடன், இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாகவும் பொறுப்பேற்கவுள்ளார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours