நாடு பூராகவும் தற்போது ஏற்பட்டிருக்கும் பாரிய பொருளாதார நெருக்கடி நிலையில், உணவுப் பஞ்சம் ஏற்படாதவாறு மக்களை வழிப்படுத்த வேண்டிய கடப்பாடு நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரதும் கடமையாகும்.

அதற்கமைவாக கிழக்குப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினுடைய பல்கலைக்கழக பண்ணை மற்றும் பேண்தகு விவசாயத்திற்குமான மூலவள முகாமைத்துவத்திற்குமான நிலையம் மற்றும் விவசாய திணைக்களத்தினுடைய மட்டக்களப்பிற்கான விரிவாக்கற்பிரிவு என்பன இணைந்து தோட்டச்செய்கையினை ஊக்குவிக்கும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.

அதற்கு அமைவாக மட்டக்களப்பு ஊறணி மற்றும் மஞ்சந்தொடுவாய் போன்ற கிராமங்களில் தற்போதைய பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு வீட்டுத் தோட்டச்செய்கையினை ஊக்குவிக்கும் முகமாக கத்தரி மற்றும் மிளகாய் கன்றுகள் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வுகளில் விவசாயப் பீடத்தினுடைய பீடாதிபதி, பேண்தகு விவசாயத்திற்கான மூலவள முகாமைத்துவத்திற்கான நிலையத்தின் பணிப்பாளர்கள், விவசாய திணைக்களத்தின் விரிவாக்கல் பிரிவிற்கான பிரதிப்பணிப்பாளர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டதுடன் விவசாயி திணைக்களத்தினுடைய உத்தியோகத்தர்களினுடைய பங்கேற்றலுடன் குறித்த நிகழ்வுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours