(மண்டூர் ஷமி)வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்;ட 200 வில் பாவக்கொடிசேனை பிரதேசத்தில் மிசாரம் தாக்கி முதியவர் ஒருவர் நேற்று (24) காலை உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர்.

முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான (71) வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

குறித்த பிரதேசத்தில் நண்பர் ஒருவரின் தோட்ட வளாகம் மாடு,ஆடுகளை பராமரித்துக்கொண்டு வருவதாகவும் தோட்டத்தினை பாதுகாக்கும் பொருட்டு யானைகளுக்கு வைக்கப்பட்டிருந்த மீன்சார வேலியில் சக்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்ட்தாகவும் சம்பவத்தை கண்ட அயலவர் ஒருவர் உறவினர்களுக்கு தெரிவித்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற  நீதிவான பீற்றர் போல்; அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்டார்  பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.


Share To:

Post A Comment:

0 comments so far,add yours