வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது
மடத்தடியில் சங்காபிஷேகம்!
திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்!
ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வெற்றி வியூகம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு
வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வெல்லாவெளியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று எரிபொருளை பெறுவதற்காக இரு நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களில் இருவருக்கிடையில் தங்களின் மோட்டார் வாகனங்களை நிரல்படுத்துவதில் ஏற்பட்ட வாய்தர்க்கம் கைகலப்பில் மாறியபோது மண்டூர் பிரதேசத்தை சேர்நதவர் ஒருவர் பலமாக தாக்கப்பட்டதையடுத்து சம்பவம் பற்றி வெல்லாவெளி பொலிஸாருக்கு சம்பவத்தை நேரில் கண்ட ஊடகவியலாளர் ஒருவரினர்ல தெரியப்படுத்ததையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் சம்பவத்தில பாதிக்கப்பட்டவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களாக வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இரண்டு எரிபொருள் நிலையங்களில் எரிபொருளுக்காக காத்திருந்கும் நபர்களுக்கிடையே கலவரம் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.உரிய அதிகாரிகள் பொது மக்களின் பிரச்சனைக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்காததே காரணம் என பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளனர்.சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours