வெல்லாவெளி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மண்டூர் பாலமுனை பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் முறைகேடு இடம்பெறுவதாக பிரதேச வாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்

குறித்த எரிபொருள் நிலையத்தில் கடந்த தினங்களுக்கு முன்னர் உரிமையாளர் அவர்களினால் அனுமதியுடன் பெறப்பட்ட டீசலை நீண்ட வரிசையில் இரு நாட்களுக்கு மேலாக காத்திருந்த மக்களுக்கு இலகுவான பொறிமுறைக்கு அமைவாக வழங்கப்படவில்லையெனவும் எரிபொருள் நிலையத்தின் உரிமையாளர் தனக்கு நெருக்கமானவருக்கும் தனக்கும் அதிகளவான டீசலை பெற்றுக்கொண்டதனால் அவ்விடத்தில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டது.அவர் கையிருப்பில் உள்ள டீசலை பொதுமக்களுக்கு வழங்கமுடியாது எனவும் தனது சொந்த தேவைக்கு மாத்திரம் தான் டீசலை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.இதனால் சம்பவ தினத்தன்று கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையில் முரன்பாடு ஏற்பட்டிருந்தது.

எனவே இப்பிரதேசத்திற்கு பொறுப்பான உரிய அதிகாரிகள் நீண்ட நாட்களாக இந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் இடம்பெற்று வரும் பிரச்சனைக்கு விரைவில் தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் பிரதேச வாசிகள் வேண்டு கின்றனர்.


 

Share To:

Post A Comment:

0 comments so far,add yours