நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகுந்த இக் காலகட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில்  தேவையுடைய மக்களுக்கு உணவளிப்பதற்கான ஓர் மனிதாபிமான செயற்பாடொன்று மட்டக்களப்பு நகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வுஹாரி மெகமட் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட குறித்த நிவாரணப்பணியின்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 250 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்ட குறித்த நிகழ்விற்கு மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் கலந்துகொண்டு  வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு ஒரு தொகுதி நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். 

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் உறுப்பனர்கள் மற்றும் மாவட்டம் பூராகவும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.








Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours