மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச திணைக்களங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு உரிய திணைக்களத்தினால் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோக அட்டைக்கு அமைவாக பெற்றோல் விநியோகம் இடம்பெற்றுவருகின்றது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக மாவட்ட செயலகத்தின் ஒழுங்குபடுத்தலிற்கு அமைவாக கடந்த ஓரிரு தினங்களிற்குள் சுமார் 1000 இற்கு மேற்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுத்திட்டத்திற்கு அமைவாக பெற்றோல் வழங்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார் மற்றும் கற்பிணித்தாய்மாருக்கென தனியான ஒழுங்குமுறை ஒன்றினை ஏற்படுத்தி சுமூகமான முறையில் எரிபொருள் விநியேகம் இடம்பெற்றுவருவதாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தேசபந்து எம்.செல்வராஜா தெரிவித்திருந்தார்.


இதன்போது அரச திணைக்களத்தால்
விநியோகிக்கப்பட்டிருந்த எரிபொருள் அட்டைகள் அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்டு, QR பரிசோதனையின் பின்னர் பெற்றோல் வழங்கப்பட்டுவருகின்றமை குறிப்படத்தக்கது. 

இதன் போது பொதுமக்களுக்கும் QR பரிசோதனையின் பின்னர் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை பரிசோதிக்கப்பட்டு  வாகன இறுதி இலக்கத்திற்கு அமைவாக பொற்றோல் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்திருந்தார்.

அத்தோடு குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் ஊடாக விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் அறுவடைக்காக சுமார் 15000 லீற்றரிற்கு மேற்பட்ட டீசல் வழங்கப்பட்டுள்ளதுடன், திருவிழாக்கள் இடம்பெறும் ஆலயங்கள் மற்றும் அரச திணைக்கள வாகனங்களுக்கும் தொடர்ச்சியாக டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours