மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் இன்று காலை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த என்.மதிவண்ணன் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளராக கடந்த 2022.03.31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை தரம் – II யைச் சேர்ந்த ஏ.ஜீ.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இவர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு, சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யா, நிருவாக உத்தியோகத்தர் எ.சுவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours