வீடுடைப்பு மற்றும் மாடுகளை களவாடிய இருவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது
மடத்தடியில் சங்காபிஷேகம்!
திருக்கோவிலில் கலாசார பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்கள்!
ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!
உள்ளூராட்சி மன்ற தேர்தல்: வெற்றி வியூகம் தொடர்பாக தேசிய மக்கள் சக்தி அபேட்சகர்களுக்கு விளக்கமளிப்பு
காத்தாங்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை பெற வரிசையில் நின்று வீடு திரும்பிய குடும்பஸ்தர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதிவுகாரர் வீதி காங்கயன்னோடை பிரதேசத்தைச் சேர்நத் மூன்று பிள்ளைகளின் தந்தையான (62) வயதுடைய முகம்மது இப்ராகிம் முகம்மது அபூபக்கர் என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து எரிபொருளினை பெறுவதற்காக ஆரையம்பதி எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த போது அங்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த எரிபொருள் நிறைவடைந்ததனையடுத்து தனது வீடு திரும்பிக்கொணடிருக்கும் போது திடீரென வீதியில் மயக்கமுற்று விளுத்ததனையடுத்து சம்பவத்தை கண்டவர்களின் ;உதவியுடன் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிவான பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்ப இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தினை பார்வையிட்ட பின்னர் விசாரணைகளின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.மேலதிக் விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours