"ஈழத்து பழநி" வேலோடுமலையில் சிறப்பாக நடைபெற்ற தீர்த்தோற்சவம்; நள்ளிரவில் சத்ருசம்ஹார ஹோமம்!
சாய்ந்தமருது சமூர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபை உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வு
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதேச சபைத் தேர்தல் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் மாளிகைக்காட்டில் !
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்லவிளையாட்டுப் போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவு
மருத்துநீர் என்றால் என்ன?
இலங்கைத் திருநாட்டின் ஊவா மாகாணத்தின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாணிக்க கங்கையோரமாக அமைந்துள்ள புனித ஸ்தலம் கதிர்காமம் ஆகும் கதிர் என்றால் சூரியன் என்றும் காமம் என்றால் அன்பு என்றும இதனால் 'சூரியனின் அன்பு' நிறைந்த இடம் என்று குறிப்பிடுகின்றனர்.
கதிர்காம கந்தனின் ஆடி மகா உற்சவம் கடந்த ஆடி மாதம் 28ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.எதிர்வரும் ஆவணி மாதம் 11ம் திகதி தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவடையவிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் வாழும் இந்துக்கள் தங்களின் தனிப்பெருங் கடவுளாக கதிர்காம கந்தப்பெருமானை கருதி வழிபட்டு வருகின்றனர்.கந்த புராணத்தில் உள்ள ஏமகூடப் படலத்தில் கதிர்காமச் சிறப்புச் சொல்லப்பட்டிருக்கின்றமையும்,இன்னும் அருணகிரிநாதரால் திருப்புகழ்கள் பாடப்பெற்றிருப்பதும் இந்த பற்றுக்கும் பக்திக்கும் முக்கிய காரணமாகும்.
பல்லின மக்களின் சங்கமமாக அன்றைக்கும் இன்றைக்கும் விளங்கிக்கொண்டிருப்பது கதிர்காம முருகன் ஆலயமாகும்.சிங்கள மொழி இலக்கியமான "ஸ்கந்த உபாத"என்கின்ற நூலில் தமிழ் மன்னனான எல்லாள மன்னனை வெல்வதற்கு துட்டகைமுனு மன்னனுக்கு கதிர்காமக் கடவுள் அருள் செய்ததாக சொல்லப்பட்டிருக்கிறது.இலங்கை வரலாறு கூறும் சிங்கள இலக்கியமான மகாவம்சமும் கதிர்காமத்தைச் சிறப்பித்துச் சொல்கின்றது.இவற்றின் காரணமாக இன்றைக்கும் கதிர்காமம் பௌத்த மத ஆலய பரிலன சட்டத்தின் கிழேயே நிர்வாகம் செய்யப்பட்டு வருகின்றது.
தொல்காப்பியம் கூறும் கந்தழி வணக்க முறையான வாய்கட்டி பூசை செய்யும் முறைமை இன்று வரை கதிர்காமத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டும் தமிழறிஞர்கள் திருமுருகாற்றுப்படை கூறும் ஐந்தாம் படை வீடும் கதிர்காமமே என்று குறிப்பிடுகின்றார்கள்.
இவற்றின் காரணமாகவே 1908ம் ஆண்டு முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோயிலை ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தார்கள் என்றாலும் அவைகள் எவையும் சாத்தியமாகவில்லை.
கப்புறாளைமார் என்கின்ற சிங்கள இனத்தவர்களே வாய்கட்டி திரைக்குப் பின்னால் முருகப்பெருமானுக்கு பூஜை செய்து வருகின்றனர்.இதனை விட அதிசயம் என்னவென்றால் இங்கே திரைக்குப் பின்னால் ஒரு பெட்டிக்கு வழிபாடு இடம்பெறுகின்றது.பெட்டியில் இருப்பது என்னவென்று இதுவரை பரமரகசியமாகவே இருக்கின்றது.
ஆனால் இவ்வகை வழிபாடுகளுக்கு அப்பால் காவடி எடுத்தல்,கற்பூரச்சட்டி எடுத்தல்,அங்கப்பிரதட்சணம் செய்தல்,தேங்காய் உடைத்தல்,தீ மிதித்தல்,முள்ளு மிதியடி,என்று இந்து மத வணக்க முறைகள் அங்கே பல்லின மக்களாலும் விருப்போடு ஆற்ப்பெற்று வருகின்றன.அங்கே ஒரு மலையிலிருந்து கிடைக்கும் வெள்ளைக்கட்டிகள் திருநீறு என்று கதிர்காமம் வரும் மக்களால் அணியப்படுகின்றது.
சிங்கள மக்கள்'கதிரகம தெய்யோ' என்று வழிபட்டு வருகின்றார்கள். கதிரையாண்டவனின் ஆலயத்தின் பேரில் இம் மக்களுக்குரிய நம்பிக்கையின் வெளிப்பாட்டின் அதியுச்ச பக்தியினை வெளிக்காட்டுகின்றது.
அங்கே வாழும் பழங்குடிகளான வேடுவர்களுக்கு முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கின்றது.தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று கந்தனைப் போற்றுகிறார்கள்.வள்ளி திருமணம் நடந்த இடம் கதிர்காமம் என்று இவர்கள் நம்புகின்றனர்.இப்படியே தமிழ்,சிங்கள மக்களின் நம்பிக்கையும் இருப்பதோடு இலங்கையின் இருமொழி இலக்கியங்களிலும் கதிர்காம வள்ளி கல்யாணம் பற்றிய கதைகளைக் காணலாம்.
முருகனின் நாயகியும் தேவேந்திரனின் திருமகளுமான தெய்வானை வள்ளியோடு இங்கு தங்கி விட்ட கந்தக் கடவுளை மீட்டுச் செல்ல முயன்றதாகவும் ஆனால் அந்த முயற்சி தோற்றுப் போகவே அவவும் இங்கேயே தனிக்கோயில் கொண்டுவிட்டதாகவும் ஐதீகக் கதைகள் சிலவும் உள்ளன.இறைவன் குமரனின் மலைக்கு அருகில் வள்ளி மலை இருக்கின்றது.அங்கே வள்ளிமலை கோயிலும் உள்ளது தனியே தேவசேனா கோயிலும் உள்ளது என்றாலும் வள்ளியம்மைக்கே எல்லாவிடத்தும்முதன்மையும் சிறப்பும் தரப்படுவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
ஆரம்ப காலத்தில் கதிர்காமத்தில் ஆகம பூர்வமான வழிபாடுகள் சில நடைபெற்றது என்பதும் இந்துக்கள் சிலரின் நம்பிக்கை எனினும் தற்பொழுது கதிர்காமத்தில் அவற்றிற்கெல்லாம் இடமே இல்லாமல் போன பிறகு இந்துக்கள் அதிகம் செறிந்து வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் கதிர்காம ஆலயங்கள் தோற்றம் பெற்றுள்ளன.அங்கெல்லாம் கதிர்காம மரபிலான வழிபாடுகள் சிறிதளவு சிவாகமச் சார்பு பெற்று தமிழியற் செழுமையோடு ஆற்றப் பெற்று வருகின்றன.
எவை எப்படி இருப்பினும் முருகப்பெருமான் அங்கு வீற்றிருக்கின்றார் இவற்றிற்கெல்லாம் பின்னால் பெரிய இரகசிம் ஒன்றுண்டு.பெரும் சித்தர் திருமூலர் 'உனுடம்பு ஆலயம்..என்று குறிப்பிட்ட நிலையை அடைந்த சித்தர்களின் பின்னணி அங்குள்ளது.
போகர் மாமகரிஷி பழனியில் இறைவனால் பழனி ஆண்டவனை நவ பாசாணத்தில் உருவாக்க பணித்த போது மகரிஷி ஐவரை கதிர்காமம் அனுப்பி அவர்களை இங்கு நிஸ்டையில் ஆளும்படி பணித்தார்.அப்போது அவர் அங்கிருந்து சக்தியை ஈர்த்தும் நவகோள்களில் உள்ள பாசாணத்தை ஈர்த்தும் தான் பழனி முருகனின் திருவுருவை முடித்தார்.என்றும் முன்னோர் கூறுகின்றனர்.அது மட்டுமல்ல போகர் மகரிஷியும் பல சித்தர்களுடன் வந்ததாகவும் அப்போது களைப்பால் பால்குடிக்க வெளிக்கிட்ட போது அருணகிரிநாதரைக் காணவில்லை என தேடிய போது கிளி வடிவில் வந்த அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியதாகவும் பின் அக்கிளிக் கூட்டை விட்டதாகவும் அதை பின்னர் திருகோணமலையில் உள்ள கன்னியா உற்றுக்கு மேலே உள்ள மலையில் சமாதி வைத்ததாகவும் செவிவழிக் கதையொன்று உள்ளது.
சித்தர்கள் வாழ்ததற்கான சான்றாக இருப்பது தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள குருபீடமும் எட்டு சமாதிகளும் ஆகும். அதன் வரலாற்றை நோக்குகையில்
கதிர்காம வரலாற்றில் எல்லோராலும் "முத்துலிங்க சுவாமி"என அழைக்கப்பட்ட கி.ரியானகிரி சுவாமிகள் முக்கியமானவர் மகரிஷி போகரால் அனுப்பப்பட்ட முத்துலிங்கசுவாமி தனது சக்தியை முழுமையாகப் பயன்படுத்தி ஒரு முருகனின் யந்திரம் வரைந்து அதற்கு சக்தியூட்டி மீண்டும் பழனிக்கு எடுத்துச் செல்ல விளைந்த போது குறவல்லி தடுத்து அதை கதிர்காமத்தில் வைத்தபோது முருகனால் தடுக்க முடியாமையினால் எம்பெருமான்அவ்விடத்திலேயே தங்கி விட்டதாகவும் அவரைக் காண தெய்வானை அம்மன் தேடி வந்த போது சம்பவம் அறிந்து கோபங்கொண்டு முருகனின் கோயிலுக்கு புறமுதுகு காட்டி இருந்ததாகவும் கதிர்காம சரித்திரம்கூறுகின்றது.தற்போது தெய்வானை அம்மன் ஆலயம் அப்படித்தான் அமைந்துள்ளது.
இற்றைக்கு இருநூறு வருடங்களுக்கு முன் எல்லோராலும் முத்துலிங்க சுவாமி என அழைக்கப்பட்ட கிரியானகிரி சுவாமிகள் வட இந்தியாவில் இருந்து கதிர்காமம் நோக்கி வந்தார்.இவர் முருகப்பெருமானே துணையென இங்கு வந்த தவசிரேஸ்ரர்.இவர் இங்கு வந்துமுருகனின் யந்திர. வரைந்து அதில் முருகப்பெருமானை அடக்கி தவத்தில் ஈடுபட்டார்.அவர் உருவாக்கிய யந்திரமே இன்றும் அங்கு இருப்பதுடன் பெரகராவில் யானைமீது வைத்து வலம் வருகின்றனர்.கிரியானகிரி சுவாமிகளின் சமாதி சிவன்கோயிலினுள் உள்ளது.
கந்த சஷ்டி கவசம் என்பது தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும்.
இக் கந்தசஷ்டி கவசத்தில் கூட "கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா"
என பாடப்பட்டுள்ளமை விஷேடம்சமாகும்.
இவ்வாறாக உற்சவ காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கதிர்காம முருகப்பெருமானை மனமுருகவேண்டி வழிபட்டுவருவதனை காணலாம்.
ஆ.நிதாகரன்,
மண்டூர்.
Post A Comment:
0 comments so far,add yours