(வி.ரி. சகாதேவராஜா)

அகரம் எழுத்துக்களுக்கு முதன்மை. அம்மா உயிர்களுக்கு முதன்மை. அரிசி உழவிற்குமுதன்மை. அன்பு பெருக, அகம் மகிழ போற்றுவோம் பொங்கலை... இந்நாள் போல்எந்நாளும் இன்பம் பெருகட்டும்.
2023  தைத்திருநாளில் எமது  மக்களின் இல்லங்களில் இருள் நீங்கி, ஒளி பிறக்கவேண்டும் என்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்தமது பொங்கல் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’  என்பதுபோல் இதுவரை நாம் அனுபவித்து வந்த
துன்பங்கள் அனைத்தும் மறைந்து நம் வாழ்வில் இன்பங்கள் பெருக வேண்டும் எனஇறைவனைப் பிரார்த்திப்போம் என்றார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு வைக்கப்படும் பொங்கல் பானையில் பொங்கி வரும்பால்போல்  அனைவரின் வாழ்விலும் இன்பமும், மகிழ்ச்சியும் பொங்கி வர வேண்டும்.

காலையில் எழுந்து குளித்து. புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டு சூரியனுக்குபொங்கலிட்டு இவ்வாண்டின் பொங்கல் திருநாளை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.

இல்லங்களிலும், ஆலயங்களிலும் பொங்கல் வைக்கப்படுகிறது. பொங்கல் பானையிலிருந்துபொங்கி வரும் பால்போல் அனைவரின் வாழ்விலும், தொழிலிலும் இன்பங்களும்,செல்வங்களும் பொங்கி வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இன்று பிறக்கும் தை முதலாகவும், தமிழ் புத்தாண்டாகவும், தமிழர் திருநாளாகவும்எமது மக்களுக்கு இனிய ஆண்டாக மலர வேண்டும். பொங்கும் மங்களம் எங்கும் தங்குக
என்று காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தமது
வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours