பாறுக் ஷிஹான்






கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் விடுக்கும் வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக கெளரவ மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ. எம்.றகீப் தெரிவித்தார்.

ஆகையினால் அன்றைய தினம் எந்தவொரு டியூட்டரியையும் திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

இதனை கண்காணித்து, உறுதி செய்யுமாறு மாநகர சபையின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் தங்களது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours