அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையில் தரம் 05 மாணவர்களுக்காக நடாத்தப்பட்ட வகுப்புகளில் பயின்று 2022 ஆம் ஆண்டு  புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற 17 மாணவர்கள் உட்பட அவ்வகுப்பில் கலந்துகொண்ட 206 மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு 10 ஆம் திகதி திங்கட்கிழமை பி.ப. 2.31 மணிக்கு அமைப்பின் தலைவர் கலாபூஷணம் கா.சந்திரலிங்கம் அவர்களின் தலைமையில் சேனைக்குடியிருப்பு கணேச மகா வித்தியாலயத்தில் இடம்பெற இருப்பதாக அமைப்பின் செயலாளர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண வரதராஜன் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழக ஐக்கிய ராச்சியத்  தலைவர் வைத்திய கலாநிதி தியாகராஜா பெரியசாமி அவர்களும் முதன்மை அதிதியாக அம்பாரை மாவட்டமேலதிக  அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் அவர்களும் ,ஆன்மீக அதிதியாக சிவஸ்ரீ பத்மநிலோஜன் குருக்கள் அவர்களும் ம கௌரவ அதிதிகளாக நாவிதன்வெளிக்கோட்டகல்விப்பணிப்பாளர் பூ.பரமதயாளன் மற்றும் கல்முனை தமிழ்ப்பிரிவு

 கோட்ட கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ். சரவணமுத்து அவர்களும் சிறப்பு அதிதிகளாக பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து சிறப்பிக்க இருப்பதாக அமைப்பின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours