காரைதீவு பிரதேச சபையின் காரைதீவு கிராமம் தமிழரசு வசம்
தேர்தல் பணிக்காகச் சென்ற அதிகாரி ஒருவர் உயிரிழப்பு
சித்ரா பௌர்ணமியில் வேலோடுமலையில் மாபெரும் குபேர வேள்வி! அனைவரையும் அழைக்கிறார் சித்தர்கள் குரல் சிவசங்கர் ஜீ
ஒரு சின்னத்திற்கு நேரே ஒரு புள்ளடி! உள்ளூராட்சி சபைத்தேர்தலில் வாக்களிக்கும் முறை மற்றும் தெரிவு தொடர்பான சிறப்பு பார்வை !
காரைதீவு பிரதேச சபையை கைப்பற்றப்போவது யார்?
தமிழ் தேசியத்துக்காக போராடுகின்ற தமிழ் தேசியவாதிகள் மீது கரிசனை கொள்ளாது மாறா போலி தேசியம் பேசுகின்ற சிங்கத்தை பார்த்து புலி என தெரிவித்த அமைச்சருக்கு நா.உறுப்பினர் இரா. சாணக்கியன் வரலாறு தெரியாது எனவே அவரின் வரலாற்றை அறிந்துவிட்டு கூறியிருக்க வேண்டும் மாறாக சிங்கத்துக்கு எல்லாம் புலி வேசம் கொடுத்து இந்த மக்களை ஏமாற்ற வேண்டாம் என்பதுடன் அமைச்சரின் கூற்றை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை (29) இடம்பெற்ற படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் 18 ஆண்டு நினைதின அஞ்சலி செலுத்தும் நினைவேந்தலில் கலந்துகொண்ட தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் உரையாற்றுகையில் ஈவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையை பெறுத்தளவில் 75 வருடங்களுக்கு மேலாக சிங்கள தமிழ் மக்களிடையே ஒரு முரண்பாடு காணப்படுகின்றது அந்த பிரச்சனை தொடர்பாக தமிழ் மபக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே ஆட்சியாளர்கள் மேற்கொள்ளுகின்ற அந்த கொடூரமான இனழிப்பு தொடர்பாக அன்றைய கால கட்டத்தில் மாமனிதர் சிவராம் மாமானிதர் சிவராம் உண்மையை உலகத்துக்கு ஊடகத்துறையினால் தெரியப்படுத்தி ஆற்றிய பணி மிக முக்கியமானது.
இவ்வாறு உண்மையை வெளிப்படுத்திவந்த தென் தமிழீழத்திலே அம்பாறை மாவட்டத்தில் முதல் முதலாக ஊடகவியலாளர் க.தேவராசா கொண்டை வெட்டுவான் இராணுவ முகாமில் 1985-12-25 ம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் நடேசன் .த.சிவராம், சுகிர்தராஜன். இரட்ணசிங்கம் உட்பட 5 பேருடன் 36 தமிழர்கள் 2 முஸ்லீம் 8 சிங்களவர்கள் உட்பட 46 ஊடகவியலாளர்கள் நடந்த உண்மை சம்பவங்களை எழுத்துமூலம் உலகத்துக்கு தெரியப்படுத்தியதன் வாயிலாக அவர்களுக்கு கிடைத்த தண்டனை மரணதண்டனை இந்த மரணத்துக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை..
சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்ற ஜனநாயகம் இந்த நாட்டிலே நடைபெற்றிருந்தால் இவ்வாறனவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள் ஒரு ஊடக போரளி என்பவன் தனது நலனையும் பாராது இந்த உண்மையை உலகத்துக்கு கொடுக்க வேண்டும் என்பதற்காக போராடுகின்றான்.
அந்த அடிப்படையில் சிவராம் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நடைபெற்ற மோதல் கொல்லப்பட்ட அப்பாவிகள் தொடர்பாகவும் அங்கே நடைபெற்ற உண்மை தன்மை தொடர்பாகவும் வடக்கு கிழக்கில் இந்த தமிழர்கள் நிம்மதியான காற்றை சுவாசிக்கின்றார்கள் என்றால் அது பேச்சுவார்த்தை மூலம் பெறப்பட்டதல்ல அது அடித்து பெறப்பட்டது எனவே இங்கு ஜனநாயகத்துக்கு இடமில்லை மாறாக வன்முறைக்குதான் இடம் இருக்கின்றது அவர் வெளிப்படுத்தியிருந்தார்.
இவ்வாறு இலங்கையை ஆண்ட ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தமிழினத்தை அடக்கி ஒடுக்கி வந்ததுடன் தமிழினத்தின் மீது ஒரு கட்டமைப்பை கொண்ட இனழிப்பை மேற்கொண்டு வந்தது அதனை வெளிப்படுத்தியதனால் 2005 ஏப்பில் 28 ம் திகதி கடத்தப்பட்டு பாராளுமன்றத்துக்கு அருகில் படுகொலை செய்யப்பட்டு வாவியில் வீசப்பட்ட நிலையில் 29 ம் திகதி சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நாட்டிலே இவ்வாறான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த போதிலும் சர்வதேச சமூகத்தினால் அவர்களுக்கு நீதி இன்னும் கிடைக்கவில்லை வெளிப்படையாக இலங்கையில் தமிழர் மீது இனப்படுகொலை நடைபெற்று வந்திருக்கின்றது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது அப்படியிருந்தும் இந்த 75 வருடங்கள் கடந்தும் இந்த தமிழினத்துக்காக ஒரு விடிவை பெற்றுக் கொடுப்பதற்காக எந்தவொரு நாடும் முன்வரவில்லை.
மாறாக தங்களுடைய பூகோள அரசியல் போட்டியின் விளைவாக இந்த நாட்டிலே தங்களின் அரசியல் இலாபத்தை ஈட்டிக் கொள்வதற்காக இந்த நாடுகள் அதாவது மேற்கத்தைய நாடுகள் மற்றும் இந்தியா உட்பட அனைவருமே தமிழர்களையும் இந்த அரசையும் தங்களின் நலன்களுக்காக பயன்படுத்த முற்படுகின்றனர்.
ஈழத் தமிழர்களை பாதுக்கப்பது இந்தியாவுக்கு மிகப் பெரும் பொறுப்பு இருக்கின்றது ஆனால் வட கிழக்கிலுள்ள தமிழர்களை ஒற்றை ஆட்சிக்குள் வைத்துக் கொண்டு தங்களுடைய நலன்களை போனுவதற்காக இதுவரை காலமும் அடக்கி ஓடுக்கி வந்திருக்கின்றது அதற்கு தங்களின் கைக்கூலிகளாக சில அரசியல் தலைவர்களை பயன்படுத்தி வந்திருக்கின்றது அதனுடைய தொடர்சியாக 2009 ஆயுத போராட்டம் முடிவடைந்த பின்னர் கூட ஜனநாயகப் பாதையில் வாழுகின்ற தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதில் இந்தியா தவறு இழைத்துள்ளது.
இலங்கையில் நடக்கின்ற பூகோல அரசியல் போட்டி இந்தியாவின் உடைய சர்வதேச பாதுகாப்புக்கு ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியிருக்கின்றது அது எதிர்காலத்தில்; ஏற்படுத்தும். அப்போது எங்கள் மக்களை பகடைக்காயாக பயன்படுத்தியதை உணர்வுவார்கள் எனவே இந்தியா தங்களது நலனை மாத்திரம் கருத்தில்; கொள்ளாது தமிழர்களை பாதுகாக்கின்ற பொறிமுறையை உருவாக்க வேண்டும் அத்தோடு மிக தெளிவாக ஒரு இனப்படுகொலை நடந்துள்ளது இந்த இனப்படுகொலை விவகாரம் சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு உறுதுணையாக நிற்பதுடன் தமிழ் தேசத்தை அங்கீகரிக்க முன்னின்று செயற்படவேண்டும்.
75 வருடகாலமாக இடம்பெற்றுவரும் இனழிப்பு காரணமாக இந்த நாடு மிகவும் ஒரு அதள பாதாளத்துக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் பெரும் கடன் சுமைக்குள் மாட்டியுள்ளது இப்படியான சூழ்நிலையிலே சர்வதேச நாணய நிதியம் (ஜ.எம்.எப்;) பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீ;ர்வை பெற்றுக் கொடுக்க எந்தவிதமான நிபந்தனையம் விதிக்காது வழங்கிவரும் நிதியினை பெற்றுக் கொண்ட அரசாhங்கம் மிக வேகமாக கடந்த சில மாதங்களாக வடக்கு கிழக்கு பூராகவும் பௌத்த மயமாக்கல் இடம்பெற்று வருகின்றதுடன் நாளுக்கு நாள் தமிழ் மக்களின் நிலங்கள் பறிபோய் கொண்டிருக் கின்றது எனவே மக்களை அழிவு பாதைக்கு இட்டுச் செல்லும் நிலைக்கு (ஜ.எம்.எப்;) நிதியுதவி வழங்க முன்வந்திருப்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மிகவும் மனவேதனையடைந்துள்ளனர்.
இந்த நிலையில் அரசின் அமைச்சர்கள் உண்மையா தமிழ் தேசியத்துக்காக போராடுகின்ற தமிழ் தேசியவாதிகள் மீது கரிசனை கொள்ளாது மாறாக போலி தேசியம் பேசுகின்ற சிங்கத்தின் வரலாறு தெரியாது அவர்களை பார்த்து புலி என்று கூறி சிங்கத்துக்கு எல்லாம் புலி வேசம் கொடுத்து எமது மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் போலி தேசியங்களை பேசிக் கொண்டு எங்கள் மக்களை ஏமாற்றுகின்ற நபர்களை நீங்கள் இனம் காணவேண்டும்.
தமிழ் தேசியத்துக்காக தமிழ் தேசிய மக்கள் முன்னணி வடகிழக்கு பூராகவும் தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்றதுக் கொண்டிருப்பதுடன் இந்த நினைவேந்தல்களை செய்கின்றது அண்மையில்; மட்டக்களப்பில் அன்னை பூபதியின் சமாதியில் நாங்கள் நினைவேந்தலுக்காக சென்றபோது அதாவது அன்னை பூபதி இந்திய அட்டூழியங்களுக்கு எதிராக 1998 ம் ஆண்டு தமிழ் மக்கள் மீது தினிக்க இருந்த 13 திருத்த சட்டமான மாகாணசபை சட்டத்துக்கு எதிரான நோக்கத்துக்காக உண்ணா நோன்பிருந்து தனது உயிரை மாய்தாரே அதற்கு எதிரான தரப்புக்கள் அங்கு நின்று நினைவேந்தலை தடுத்த ஒரு காட்சி மக்களுக்கு அம்பலப்பட்டுள்ளது.
இவ்வாறு அன்னை பூபதியின் நோக்கத்துக்கு எதிராக 13 ஆதரிக்கின்ற தரப்புக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை எதிர்த்து நின்று நினைவேந்தலை செய்ய விடாது தடுத்தமை கவலையானது அதனை மக்கள் தெளிவாக அறிவார்கள். இருந்தபோதும் ஒற்றையாட்சியை எதிர்த்து நிற்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மழுங்கடிக்க வேண்டும் பல தரப்பு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
எனவே எந்த சவால் வந்தாலும் நாங்கள் தொடர்ந்து தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் என்ன நோக்கத்துக்காக மக்களின் போராளிகளின் மற்றும் ஊடகவியலாளர்களது தியாங்கள் நடைபெற்றதே அந்த தியாகங்களுக்காக ஒரு அணியாக எங்கள் தேசம் அங்கீகரிக்கப்படும் வரை மக்களுடன் இணைந்து பயணிப்போம் என மாமனிதர் சிவராமின் நினைவேந்தலில் இந்த உறுதி மொழியை மக்களுக்கு வழங்குகின்றேன் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours