எஸ்.சபேசன்


Miot wales uk அனுசரணையில் வட்ஸ் uk  பெரியநீலாவணை சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையினால் இலவச மருத்துவ முகாம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில்சனிக்கிழமை இடம்பெற்றது.

பெரியநீலாவணை 1 B  செஞ்சிலுவை தொடர்மாடியில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாமானது காலை 9.00 மணி தொடக்கம் 3.00  மணி வரை இடம் பெற்றது.

இவ் மருத்துவமுகாமில்   சிறுவர் மருத்துவசேவை, பெண்நோயியல் மருத்துவசேவை, தொற்றாநோய்கள், பல்வைத்தியம் ,கண்மருத்துவசேவை , சுகாதார கல்விச் சேவை, மருத்துவஆய்வுகூடச் சேவை  ,ஆகிய சேவைகள்  இடம் பெற்றது இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக கிழக்குமாகாணக்கல்விப்பணிப்பாளர் செல்வி கனகசூரியம் அகிலா சிறப்புஅதிதிகளாக கிழக்குமாகாண கூட்டுறவு ஆணையகத்தின் செயலாளர் எஸ்.நவநீதன் கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேசசெயலாளர் அதிசயராஜ் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையின் பணிப்பாளர் ஆர்.முரளீஸ்வரன் வட்ஸ் uk தலைவர் உமாச்சந்திரன்  வட்ஸ் uk அமைப்பின் அங்கத்தவர் சுந்தர் ஓய்வு நிலை பொறியியலாளர் ரி.சர்வானந்தன் பெரியநீலாவணை பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி துசார உட்பட பலர் கலந்துகொண்டனர் இதற்கான முழு அனுசரணையினை தமிழர் மருத்துவ நிறுவனம் Miot wales uk   வழங்கியமை குறிப்பிடத்தக்கது .     







    















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours