மட்டக்களப்பில் போதைப்பொருள் பாவனையற்ற மாதிரி கிராமத்தை உருவாக்கும் நிகழ்சி திட்டம்.
ஒன்பது நாட்களில் வற்றாப்பளையில் யாழ். கதிர்காம பாதயாத்திரைக் குழுவினர்!
அருகம்பை கடற்கரை பகுதியை அழகுபடுத்திய இராணுவம்
ஆதம்பாவா எம்.பி. க்கு சபாநாயகரினால் புதிய பதவி வழங்கிக் கௌரவிப்பு
கல்முனையில் 03 நாட்கள் இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு.!
வரலாற்றுப்பிரசித்திபெற்ற
காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசித்திங்கள்
திருக்குளிர்த்திச்சடங்கு பெருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி திங்கட்கிழமை
மாலை கடல்தீர்த்தம் எடுத்துவந்து திருக்கல்யாணக்கால் நடும் பைவத்துடன்
ஆரம்பமாகின்றது.
இச்சடங்குப்பெருவிழா
தொடர்ந்து 08தினங்கள் நடைபெற்று ஜுன் மாதம் 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை
அதிகாலை 4.30மணிக்கு திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும் எனஆலய
தர்மகத்தாக்களுள் ஒருவரும் பிரதம பொறியியலாளருமான பரமலிங்கம் இராஜமோகன்
தெரிவித்தார்.
30ஆம் திகதி
செவ்வாய்க்கிழமை மாலை சடங்குப்பூஜையும் ஊர்சுற்றுக்காவியம் பாடலும்
இடம்பெறும்.தொடர்ந்து புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ந்து
பகல் 1மணிக்கு பூசையும் மாலை 7மணிக்கு சடங்குப்பூசையும் ஊர்சுற்றுக்காவியம்
பாடலும் இடம்பெறும்.
05ஆம் திகதி திஙகட்கிழமை பொங்கலுக்கான நெற்குத்தும் வைபவம் நடைபெறும்.மறுநாள்(6) செவ்வாய் அதிகாலை குளிர்த்தி பாடப்பெறும்.
எட்டாம்சடங்கு 12ஆம் திகதி மாலை 7மணிக்கு இடம்பெறும் என மேலும் அவர்கள் தெரிவித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours