கல்முனை சந்தான ஈஸ்வரர் ஆலய மாநகர தேரோட்டம் !
திருக்கோவிலில் புதுவருட சமுர்த்தி அபிமானி கண்காட்சியும் விற்பனை சந்தையும்
யாழ் - கதிர்காமம் பாதயாத்திரைக்கான ஏற்பாடு ஆரம்பம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவில் உருவான க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்: அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு
வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு
கிழக்கு மாகாணத்திலுள்ள கடற்கரை பிரதேசங்களை தூய்மைப்படுத்தி, அழகுபடுத்தும் பொருட்டு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களின் விஷேட கருத் திட்டத்திற்கமைவாக கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (27)
சுத்திகரிப்பு வேலைத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களின் ஆலோசனை, வழிகாட்டலில், மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம் அவர்களின் தலைமையில் பொறியியலாளர் ஏ.ஜே.எச்.ஜௌஸி, வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் ஆகியோரின் நெறிப்படுத்தலில் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கல்முனை வாடிவீட்டு வீதி கடற்கரைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது, மருதமுனை, பெரிய நீலாவணை மற்றும் பாண்டிருப்பு கடற்கரைப் பகுதிகளும் சிரமதானம் செய்யப்பட்டு, கழிவுகள் யாவும் அகற்றப்பட்டு, சுத்தமாக்கப்பட்டுள்ளன.
இப்பணிகளில் சுகாதார மற்றும் பொறியியல் வேலைப் பிரிவுகளின் மேற்பார்வையாளர்களும் ஊழியர்களும் பங்கேற்றிருந்தனர்.
நகரையும் சுற்றுச்சூழலையும் தூய்மையாகவும் அழகாகவும் வைத்திருப்பதன் ஊடாக சுற்றுலாப் பயணிகளை கவரும் நகராகவும் டெங்கு அற்ற பிரதேசமாகவும் கல்முனை மாநகரை நிலைப்படுத்தும் பொருட்டு கடற்கரைப் பகுதிகளிலும் பிரதான வீதிகள் உள்ளிட்ட பொது இடங்களிலும்
Post A Comment:
0 comments so far,add yours