( வி.ரி. சகாதேவராஜா) 

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலய ஆடிவேல்விழா உற்சவத்திற்காக வரலாற்றில் முதல் தடவையாக மேற்கொள்ளப்பட்ட ஆயிரம் வேல்கள் தாங்கிய அடியார்களுடனான மாபெரும் வேல் யாத்திரையின்போது, 
ஆறு நாட்களும் மூன்று வேளையும் 18 யாகங்கள் நடாத்தப்பட்டன.

திருமூலர் பெருமானின் அருளாசியுடன், சித்தர்களின் குரல் சிவசங்கர் குருஜியின் நேரடி வழிகாட்டலின் கீழ் இந்த மாபெரும் வேல் யாத்திரை  வேலோடுமலை முருகன் ஆலயத்தின் ஆதீனகர்த்தா முருகஸ்ரீ தியாகராஜா ஆசிரியர்  வேல்சாமியாக இருந்து வெற்றிகரமாக நடைபெற்றது.

பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்ட ஆறு நாட்களிலும்  யாத்திரீகர்கள் அனைவரும் மூன்று வேளை யாகங்களில் ஈடுபட்டனர்.

சித்தர்களின் குரல் ஆஸ்தான குரு சிவசங்கர் குருஜி நமசிவாய மகேஸ்வரன் சுவாமிகளின் பங்கேற்புடன் இந்த யாகங்கள் சிறப்பாக நடைபெற்றன.

இதைவிட தினமும் நள்ளிரவு 12 மணிக்கு விசேடயாகம் நடுக்காட்டில் நடாத்தப்பட்டன.
அனைத்து  ஏற்பாடுகளும் சித்தர்களின் குரல் அமைப்பின் தலைவர் ஆதித்தன், துணைத்தலைவர் மனோகரன் ஆகியோரின் நேரடி ஏற்பாட்டின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றது..

வரலாற்றில் ஆறு நாட்களும் யாகங்கள்  இவ்வருடமே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours