- யூ.கே. காலித்தீன் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது வருடாந்த மாநாடு கொழும்பு 10 தாபலக கேட்போர் கூடத்தில்
மர்ஹூம் கலைவாதி கலீல் அரங்கில் (25) நடைபெற்றது. 

மேற்படி நிகழ்வானது தலைவி புர்கான் பீ. இப்திகார் தலைமையில் நடைபெற்ற
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மலேசியா மற்றும் மாலைதீவுக்கான உயர் ஸ்தானிகர் பத்லி ஹிசாம் ஆதம் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு பேச்சாளராக களனி பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் தெல்கஹவத்தே ராஜ்குமார் சோம தேவ, இலங்கையில் முஸ்லிம்களது வரலாறு பற்றி பேசினார்.

தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிவா இராமசாமி, சுதந்திர ஊடக இயக்கத்தின் காலம்சென்ற கமல் லினாரச்சி மனைவி , ஊடகத்துறை சிங்கள இலத்திரனியல் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜாவித் முனவ்வர், இலங்கை ருபாவாகினிக் கூட்டுத்தாபணத்தின் தயாரிப்பாளர் சியாமா யாக்கூப்,  காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன், மற்றும் இலங்கை இந்திய ஊடக ஏற்பாட்டாளர் இந்திய மணிச்சுடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் சாஹூல் ஹமீத் ஆகியோர்களும் பிரதம அதிதியினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 26வது ஆண்டுக்கான நினைவு மலரும் வெளியிடப்பட்டது.

இரண்டு அமர்வுகளாக நடைபெற்ற நிகழ்வில் 2023/24ம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
புதிய நிர்வாகத்திற்கு தலைவராக என்..எம். அமீன், செயலாளராக சிஹார் அனீஸ், பொருளாலராக  கல்முனை எம். எம். ஜெஸ்மின், ஆகியோரோடு நிறைவேற்றுக்குழு  உறுப்பிணர்களாக 14 பேர் முறையே முன்னாள் தலைவி புர்கான் பீ இப்திக்கார், சாமிலா சரீப், சாதிக் சிஹான்,. இர்சாத் ஏ காதர், எம்.ஏ.எம். நிலாம், எம்.பி.எம். பைருஸ், றிப்தி அலி, ஜாவித் முனவ்வர், எம். சமிஹா, முஸ்தபா மௌலவி, டி.டிம். ராபி, ஜி.எம். நாளிர் ஜமால்டீன், எம். சாஹிர், ஜெம்சித் அசீஸ், எம். றிபாஸ், அஷ்ரப் ஏ சமத் ஆகியோர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு நிறைவு செய்யப்பட்டமை இங்கு  குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours