கல்லடியில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 133 ஆவது ஜனனதினம் அனுஸ்டிப்பு.
மட்டக்களப்பில் உள்ளூர் தேர்தலை சுமுகமாகவும், சுதந்திரமாகவும் ,நடாத்துவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்கவும்.மட்டு.அரசாங்க அதிபர் கோரிக்கை
திருக்கோவில் தூய சூசையப்பர் ஆலய நூற்றாண்டு விழா கோலாகலமாக ஆரம்பம் !
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இரு தினங்களாக நடைபெற்ற 17ஆவது பட்டமளிப்பு விழா
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்:
நூருல் ஹுதா உமர்
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அசேல குணவர்த்தன மற்றும் சுகாதார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் கடமையாற்றும் தெரிவு செய்யப்பட்ட வைத்தியர்கள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான இருநாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை துறைசார் நிபுணர்கள் மற்றும் வைத்திய நிபுணர்களின் பங்குபற்றுதலுடன் பல்வேறு விரிவுரைகள் இடம்பெற்றன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் அவர்களின் வழிகாட்டலுக்கும் ஆலோசனைக்கும் அமைவாக திட்டமிடல் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம் மாஹிர் அவர்களினால் இணைப்புச் செய்யப்பட்ட இப்பயிற்சிநெறியில் வைத்திய உத்தியோகத்தர்களும் தாதிய உத்தியோகத்தர்களும் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தார்கள்.
நிகழ்வின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித் அவர்கள் கலந்து கொண்டு பணிப்பாளர் சார்பான உரையை நிகழ்த்தியதுடன் பயிற்சி நெறியில் கலந்து கொண்ட பங்குபற்றுநர்களிடம் பயிற்சி நெறி தொடர்பிலான விளக்கங்களையும் கேட்டறிந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours