(வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்டபக்ஷ பிரதிஸ்டா
மஹா கும்பாபிஷேகத்தின் முதல் நிகழ்வான எண்ணெய்க்காப்பு சாத்தும்கிரியை
நிகழ்வுகள் நேற்று (26) திங்கட்கிழமை ஆரம்பமாகியது.
காலையில் இருந்தே பெருந்திரளான பக்தர்கள் எண்ணெய்க் காப்பு சாத்துவதற்காக நீண்ட வரிசையில் நின்றனர்.
கடந்த(24) சனிக்கிழமை விசேட கர்மாரம்ப கிரியைகளுடன் கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமானது.
நேற்று(26)
திங்கட்கிழமையும் , இன்று (27) செவ்வாய்க்கிழமையும் எண்ணெய்க் காப்பு
சாத்தும் நிகழ்வு இடம் பெறும் என அறிவிக்கப் பட்டிருந்தது.
நாளை
புதன் கிழமை(28) காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறும் என ஆலய
பரிபாலன சபை செயலாளர் சின்னத்தம்பி சிவகுமார் தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours